மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு!!

60

நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று (19 /02 /2012 )
ஞாயிற்று கிழமை மதுரை “பால்மீனாஸ்” திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நாம்தமிழர் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் தடா சந்திரசேகர்
தலைமை தாங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன்
கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக “உச்சிதனை
முகர்ந்தால்” திரைப்பட இயக்குனர் திரு.”புகழேந்தி தங்கராஜ்” மற்றும் திரைபடத்தில்
புனிதவதி கதாபாத்திரத்தில் நடித்த நாயகி “நீனிதா”ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவா,மாநில கலைபண்பாட்டு
பாசறை அமைப்பாளர் அய்யா தமிழ்கூத்தன்,சுந்தர வந்தியத்தேவன்,மாவட்ட அமைப்பாளர்கள்
வழக்கறிஞர் சீமான்,சிவானந்தம்,செங்கண்ணன்,அரசகுமார்,செந்தில்,அருன்செயசீலன்,ராமநாதன்,
சின்னத்தம்பி வேங்கைராசன்,இளைஞர் பாசறை பாரதி சிவா,மற்றும் செய்திதொடர்பாளர்கள் இராசகுரு,
சுரேசுகுமார்,மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் பாக்கியராசன் உட்பட கட்சியின் முக்கிய
பிரமுகர்கள் 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள்
அறிமுகபடுதப்பட்டனர். மேலும் “உச்சிதனை முகர்ந்தால்” திரைபடத்திற்கு மதுரைமாவட்ட
நாம்தமிழர் கட்சியின் சார்பாக இலவச “நுழைவுசீட்டு” வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை
மாவட்ட செய்திதொடர்பாளர் இராசகுரு தொகுத்து வழங்கினார்.

முந்தைய செய்திசிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திஜெனீவாவுக்கு பேரணியாக வாருங்கள்-தமிழகத்தின் அழைப்பு (காணொளி)