நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்திய பொங்கல் விழா மற்றும் தமிழர் தேசிய திருவிழா – நிழற்படங்கள் இணைப்பு!!

47

கடந்த சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இனமான இயக்குனர் திரு. மணிவண்ணன் அவர்கள் பரிசளித்து பேருரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அன்பு தென்னரசன், திரு. சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பல ஊர்களில் இருந்து பொது மக்கள் வந்து விழாவில் கலந்து கொண்டனர்.

அனைத்துப் படங்களையும் காண கீழே சொடுக்கவும்:

(பின் குறிப்பு: காலதாமதமாக இச்செய்தி வெளியிடப்பட்டமைக்கு வருந்துகிறோம்)

முந்தைய செய்திதாமதம் வேண்டாம்!
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் சொல்லும் உடல் ரகசியம்