ராமேஸ்வரத்தில் ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை, வெளியேறுமாறு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் – தமிழன் தொலைக்காட்சி காணொளி இணைப்பு!!

27

ராமசுவரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் தங்கை கணவரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ம.தி.மு.க. தோழர்கள் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபக்சவின் தங்கை கணவர் நடேசன் குமரனை தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம்
வந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க, வை சேர்ந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர். அதோடு ராமேஸ்வரம் கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நடேசனை முற்றுகையிட்ட அவர்கள்; நடேசனை அடித்து உதைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து நடேசனை மீட்டு அழைத்து சென்றனர்.மேலும் நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

நன்றி: தமிழன் தொலைக்காட்சி

முந்தைய செய்திமத்திய அரசின் இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
அடுத்த செய்திதமிழர் தேசிய திருவிழா – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!