நாம் தமிழர் கட்சி மற்றும் சுபா.முத்துக்குமார் தொண்டர்படையின் சார்பாக தஞ்சையில் தமிழர் திருநாள்/தமிழர் எழுச்சி நாள் கலைவிழா – படங்கள் இணைப்பு!!

112
நாம் தமிழர் கட்சி மற்றும் சுபா.முத்துக்குமார் தொண்டர்படையின் சார்பாக செருவாவிடுதி கடைதெருவில் தமிழர் திருநாள் – தமிழர் எழுச்சி நாள் கலைவிழா நடைபெற்றது. இதற்க்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ. சக்திவேல் தலைமை தாங்கினார். இந்த விழாவில் மாணவ மாணவியருக்கான அறிவுத்திறன் போட்டிகள் மிகவும் நல்ல முறையில் நடத்தப் பட்டன. இப்போட்டிகளை தஞ்சை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் செருவை. இ. ரா. சரவணன் அவர்கள் நடத்தினார். இந்த விழாவில் மாநில பரப்புரையாளர் க. திலீபன் எழுச்சி முழக்கமிட்டார். சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி க. ரமேசு, வா. கொல்லைக்காடு பெ.கணேசன், திருச்சிற்றம்பலம் இரா. பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். அதிகாலையில் மகளிருக்கான கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை செருவை. சு. மகாராசா, ப. ராசா, ப. குணசேகர், அ. பிரபு, ரா. போத்திராசா, இரா, அன்பழகன், பழனி. பாஸ்கர் ஆகியோர் கவனித்தனர். இறுதியில் செருவை. ஒருங்கிணைப்பாளர் அ. சுதாகர் நன்றியுரையாற்றினார். தொடக்கத்தில் விழாவில் சித்துக்காடு ஒருங்கிணைப்பாளர். செ.கவிதாசு (எ) கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். விழாவில் ஏராளமான மாணவ மாணவியரும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
படங்கள்