சிவகங்கை மாவட்டம் அரணையூரில் நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா: படங்கள் மற்றும் காணொளிகள் இணைப்பு!!

81

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டம்.

அண்ணனின் சொந்த ஊரான அரணையூரில் 16.01.12 அன்று பொங்கல் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பாக மிக சிறப்பாக நடை பெற்றது.மாபெரும் கபடி போட்டி,பாரம்பரிய இசை,கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. “வீரத்தமிழர் விளையாட்டு! வென்று மானத்தை நிலைநாட்டு!” என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. “கலையை மீட்பதும் கலைஞனை காப்பதும் நமது கடமை” என்ற முழக்கத்தோடு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தன்னுடைய குடும்பத்தினருடனும்,கட்சி நிர்வாகிகளுடனும் கொண்டாடினார்.அதைதொடர்ந்து
நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது .இதில் வெற்றிபெற்ற “மறவமங்கலம் ஆண்டவர்” அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 50000 , இரண்டாம் இடம்பெற்ற “நாம் தமிழர் சிவகங்கை” அணிக்கு ரூபாய் 40000 ,மூன்றாம் இடம்பெற்ற “தூத்துக்குடி திலீபன்” அணிக்கு 30000 ,
நான்காம் இடம்பெற்ற “மாவீரன் முத்துகுமார்” அணிக்கு 20000 மும் வழங்கப்பட்டது.
மேலும் இவற்றை தொடர்ந்து “மடப்புரம் கருப்பையா” குழுவினரின் கரகாட்டம் மற்றும் “காரைக்குடி தெம்மாங்கு பாட்டு” குழுவின் தெம்மாங்கு பாட்டு,போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்சிகளில் (WORLD SIKH NEWS) ,(chief editor) முதன்மை தொகுப்பாளர் பேராசிரியர் ஜக்மோகன் சிங், கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பொங்கல் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் தடா சந்திரசேகர், கலைகோட்டுதயம், வெற்றிக்குமரன்,கோட்டைகுமார்,ராஜீவ்காந்தி,மாறன், ராதாகிருஷ்ணன் (இளையான்குடி ஒன்றிய அமைப்பாளர்) மதுரை நிர்வாகிகள் அரசகுமரன்,முருகபாண்டி,ராமநாதன் ராசாமணி
திருப்பூர் நிர்வாகிகள் செல்வம்,பரிமளம்,மோகன் ராஞ்சியம் பாண்டியராஜன் (திருமயம் ஒன்றிய அமைப்பாளர்) உட்பட 500 க்கும் அதிகமான நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உழைத்தவர்கள்

வெற்றிச்செல்வன் (அருனையூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்)
பாலமுருகன் (கிளை அமைப்பாளர்)
சந்திரசேகர் (விசவனூர் கிளை )
வேல்முருகன் (தெற்கு விசவனூர் கிளை )
மு.ஆசைதம்பி (வடக்கு விசவனூர் கிளை )
ஜான்சன் -காரைக்குடி (முத்துகுமார் பாசறை )
தமிழ்கார்த்தி -காரைக்குடி (முத்துகுமார் பாசறை)
நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் “இயக்குனர். ஐ கோ”

நன்றி
இராசகுரு & மருத்துவர் சுரேஷ்
செய்திபிரிவு
நாம்தமிழர் கட்சி
மதுரை

காணொளி:

படங்கள்:
(அணைத்து படங்களையும் காண கீழே சொடுக்கவும்)

முந்தைய செய்திஐயப்ப பக்தரின் உடலை காவல் துறை எரியூட்டியது உரிமை பறிப்பாகும்: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்திநாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் அவர்கள் வீட்டில் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்: படங்கள் இணைப்பு!!