சாந்தவேலுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ் உணர்வாளர்களின் மேல் ஏவப்பட்ட ‘காவல்’ துரையின் உச்சகட்ட அடக்குமுறை/மனித உரிமை மீறல்: காணொளி இணைப்பு!!

27

இன்று ஏவல் (காவல் ) துறையின் அராஜகம் உச்ச கட்டம். இறந்து போன சாந்தவேலுக்கு நீதி கேட்டு அனைத்து தமிழுணர்வு கட்சிகளும் இணைந்து போராடின. அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு கோரிக்கையும் இந்த அரசு ஏற்கவில்லை . அரசு வாயே திறக்க வில்லை . மாறாக தன்னுடைய ஏவல் துறையை பயன்படுத்தி குண்டுக் கட்டாக அனைத்து கட்சித் தலைவர்களையும் , தமிழ் உணர்வாளர்களையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது . பின்பு காவல் துறை அந்த இறந்தவர் குடும்பத்தை இழுத்து போட்டு விட்டு சாந்தவேலுவின் சடலத்தை ஒரு அவசர ஊர்தியில் ஏற்றி அவர்களே எரித்து விட்டனர். தமிழக வரலாற்றிலேயே இப்படி பிணத்தை பிடுங்கிப் போய் சொல்லாமல் கொள்ளாமல் எரிப்பது இதுவே முதல் முறை போல் தெரிகிறது. நாம் அனைவரும் நிதி திரட்டி இந்த குடும்பத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் . இப்படி அராஜகம் செய்த தமிழக அரசையும் , காவல் துறையையும் வன்மையாக தமிழ் உணர்வாளர்கள் கண்டிக்கின்றோம்.

போலீசாரின் அடக்குமுறையைப் பற்றி தன முகநூலில் குமுதம் மூத்த மிருபர் ஏகலைவன் அவர்கள் பதிவு செய்தது:

என்னடா கொடுமை இது ஐய்யப்ப பக்தர் சாந்தவேலுவின் சவம் இருந்த வீட்டிற்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் வலுக்கட்டாயமாக நுழைந்தது. அங்கிருந்த மதிமுக மல்லை சத்யா, நாம் தமிழர் கட்சி ஆவல் கணேசன் அன்பு தென்னரசன்,தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், பேராசியர் தீரன்,, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான், இயக்குனர் கௌதமன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அமைபினர்களையும் பெரும் திரளான உணர்வாளர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கெஜலட்சமி கல்யாண மட்டபத்தில் அடைத்து வைத்துவிட்டது. சாந்தவேலுவின் வீட்டிற்கு சென்ற செந்தமிழன் சீமானை தெருவிலேயே மறித்து தடுத்ததோடு அவரையும் மண்டபத்திற்கு கொண்டு சென்றது. கடைசியாக போலீசாரே சாந்தவேலுவின் உடலை எடுத்து அடக்கம் செய்திருக்கிறது. வெல்க கேரள போலீசாரின் கடமை….மன்னிக்கவும்..தமிழக போலுசாரின் கடமை.

மே 17 இயக்கத் தோழர் திருமுருகனின் முகநூல் பதிவிலிருந்து ஒரு பகுதி:

காவல் துறை தன் கோரமுகத்தை காட்டியது. எந்த வித பண்பாடுமன்றி தன்னால் செயல் பட முடியும் என்பதை இன்று காட்டியது. சாந்த வேலின் உடலை கைப்பற்ற காவல் துறை மிருகத்தனமாக நடந்து கொண்டது. பிற்பகலில் மஜக தோழர் பேசிக்கொண்டு இருக்கும் போது, சிறப்பு காவல் படையைக் கொண்டு முற்றுகையிட்டது. தோழர்கள் சாந்த வேலுவின் உடலை சுற்றி நின்று முழக்கமிட்டு பாதுகாத்த போது, காவல் துறையின் அதிகாரிகள் தடித்த வாதங்களையும், சீரற்ற நகர்வுகளையும் நகர்த்தி பின் வலுக்கட்டாயமாக உடலை கைப்பற்ற முயன்றது. தடுத்த தோழர்களை முரட்டுத்தனமாக நெருக்கி, தோழர் வன்னியரசு, தோழர் அதியமானையும் முரட்டுத்தனமாக இழுத்தது. தோழர்.வேல்முருகன் கடுமையாக வாதிட்ட போதும் காவல்துறை உடலை கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. தடியடி நடத்தவும் தயாராக இருந்த காவல்துறை பின் தோழர்களை கைது செய்ய ஆரம்பித்தது. முதல் கட்டமாக வன்னியரசு, வேல்முருகன், வெள்ளையன், நாம் தமிழர்-அன்பு தென்னரசு, அதியமான், கயல், தீரன் உள்ளிட்டவர்களை கைது செய்தது. பின் இரண்டாம் கட்டமாக மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்களை கைது செய்தது. இதற்கு பிறகு நானும் , இயக்குனர். கெளதமனும் ஒழுங்கமைக்க முயன்ற போது கண்ட காட்சிகள் தமிழக காவல் துறை, மனித நேயமற்ற சிங்களர்களைப் போல நடக்க ஆரம்பித்ததை கண்ணால் கண்டோம். அனைவரையும் அப்புறப்படுத்திய காவல்துறை சாந்தவேலின் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இழுத்து கைது செய்ய முயன்றது. குழந்தைகள் தந்தையின் உடலின் மீது விழுந்து “ அப்பா, அப்பா” என்று கதறின, எதையும் பொருட்படுத்தாத காவல்துறை அக்குடும்பத்தை மிரட்ட ஆரம்பித்தது. அக்குடும்ப பெண்கள் கடுமையாக எதிர்த்ததை எதிர்பார்க்காத காவல்துறை சாந்தவேலின் சகோதரரை சமாதானப்படுத்தி தனது திட்டத்திற்கு உடன்பட வைக்க முயன்றது. அந்த சமயத்தில் தோழர். சமுத்திராதேவியை கண்ட காவல் துறை அவரை கைது செய்தது. பிறகு எங்கள் இருவரையும் கைது செய்து கொண்டு சென்ற போது, மல்லை சத்தியா தோழர்கள் உள்ளிட்டவர்களை முறைப்படி அடக்கம் செய்ய வருமாறு ஏமாற்றி காவல் துறை வரவழைத்தது. அப்பொழுது அவர்களிடம் ‘ சந்தவேலின் உறவினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால், நம்மைக் கொண்டு எரியூட்ட காவல் துறை முயற்சிக்கிறது; எனவே நாம் செல்ல வேண்டாம் , அந்த உடலை கைப்பற்றிய காவல்துறையே பதில் சொல்லட்டும்’ என்ற போது அவரும் இனைந்து அங்கிருந்து கைது செய்யப்பட்டு வெளியேறினோம். அனைவரையும் கைது செய்து வெளியேற்றியபின் அக்குடும்பத்தை மிரட்டி பணிய வைக்க முயன்ற காவல் துறை அக்குடும்பத்தின் உறுதியால்தோல்வியடைந்தது. பிறகு அம்பத்தூர் எரியகத்தில் மாலை 6 மணியளவில் குடும்பத்தின் ஒப்புதலும், குடும்பம் செலுத்த வேண்டிய இறுதி மரியாதை செலுத்தப்படாமலும், குடும்பத்தினர் யாரும் இல்லாமல் காவல்துறையின் முன்னிலையில் அனாதையாக எரியூட்டப்பட்டது.

காணொளி: