கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பில் 22ஆம் தேதி அன்று முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து போராட்டம் – படங்கள் இணைப்பு!!

50

கோவை-22/12/2011

முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை உதாசீனப்படுத்தும் கேரளா அரசை கண்டித்தும்,தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முடக்க வஞ்சகத்தன்மையுடன் முல்லை பெரியார் அணையஉடைத்துவிட்டு புது அணையை கட்டும் கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழகம் மற்றும் கேரளா இரு மாநில அரசுகளின் நல்லுறவு பாதிக்கும் வண்ணம் தமிழக கேரளா எல்லைகளில் நடைபெறும் சம்பவங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும் மத்திய அரசு மவுனத்தை கலைத்துவிட்டு முல்லைப் பெரியார் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், கோவை கேரளா எல்லை ஆத்துப்பாலத்தில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக மாநில செயலாளர் இ. உம்மர் தலைமையில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி புறப்பட்டது. ஆத்துபாலத்தில் வைத்து கோவை மாநகர காவல்துறை துனை கமிஷனர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர். தமுமுக மாநில பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் மாநில துனைச்செயலாளர்கள் கோவை செய்யது, சாதிக் அலி,அவர்களுடன் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் பர்கத் அலி, சாகுல் அமீது, அப்பாஸ், நூருதீன், மீன் அப்பாஸ், ரபிக் ,ஷாஜகான், உட்பட மாநகர, நகர, கிளை நிர்வாகிகள், அதுபோல் பொள்ளாச்சி நிர்வாகிகள் அகமது கபூர்,பஷிர், மேட்டுபாளையம் நிர்வாகிகள் அப்துல் ஜப்பார் உட்பட 250 பேரை கைது செய்து மண்டபத்தில் வைத்தார்கள். பிறகு மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.

நன்றி – கோவை தங்கப்பா

[nggallery id=5]

 

முந்தைய செய்திதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? – விளக்கக் கட்டுரை!!
அடுத்த செய்திகடந்த 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து சீமான் தலைமையில் கோவை எல்லைப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது – தமிழன் தொலைக்காட்சி செய்திக் காணொளி இணைப்பு!!