முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனியில் தீக்குளித்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தார்

42

 

 

 

 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார். 

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்கக்கோரி தேனியில் நேற்று மாலை வாகன ஓட்டுனர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை சாலை சுந்தரம் சேர்வை பகுதியில் வசித்து வந்தவர் சண்முக சுந்தரம். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு சீனிவாசன், சரவணன், பாலு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் (வயது 31) என்ற 4 மகன்களும், வசந்தி, சாந்தி, சந்திரா என்ற 3 மகள்களும் உள்ளனர். தந்தை சண்முகசுந்தரம் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும் பாலுவும் சமீபத்தில் இறந்து விட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது. இதனையடுத்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது தாயார் சண்முகத்தாயுடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் தேனியில் உள்ள தனியார் வாகன சேவை நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

தேனி நேரு சிலை பகுதிக்கு அவர் நேற்று மாலை 4 மணியளவில் வந்தார். அங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றிவிட்டு நேரு சிலை பீடத்தின் மீது ஏறி தனது உடலில் தீவைத்துக் கொண்டார்.

 

கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
 

அப்போது தீக்குளித்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், முல்லைப் பெரியாறு அணை பிரச் சினைக்காக தீக்குளித்தேன்’ என்று உருக்கமாக கூறி உள்ளார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

நன்றி – நக்கீரன்

முந்தைய செய்திஉச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை காண்க – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்…
அடுத்த செய்திகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஒரு சிறுவனின் பேச்சு – காணொளி இணைப்பு