முல்லைப் பெரியாறு: கேரளா ப‌க்க‌ம் சாய்கிறது மத்திய அரசு – நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி ‌தீ‌ர்மான‌ம்

19

பெ‌ரியா‌ர், எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌நினை‌வை‌ப் போ‌ற்றுவோ‌‌ம் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் செ‌‌ன்னை‌யி‌ல் இ‌ன்று பொது‌க் கூ‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இ‌தி‌ல், த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம், மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு ‌பிர‌ச்சனை, கூட‌ங்குள‌ம் அணு ‌மி‌ன் ‌நிலைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைக‌‌ள் கு‌றி‌த்து ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1

தந்தை பெரியாரின் வழியில் சம உரிமைச் சமூகம் காண்போம்!

மானுடத்திற்கு வழிகாட்டியாக நின்ற தமிழர் இனம், மதத்தாலும், சாதியாலும் பிரிக்கப்பட்டு, தன் மானம் இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களை பகுத்தறிவாலும், உயர்ந்த மனிதாபிமானச் சிந்தனைகளாலும் தட்டி எழுப்பி ஒரு போராட்டக் குணமுள்ள சக்தியாக மாற்றியவர் தந்தை பெரியார். தன்னலமற்ற அவரது சமூகத் தொண்டு தமிழருக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்துவரும் அனைத்து மொழி இனத்தவருக்கும் சமூக விடுதலைப் பெறும் திறவுகோலாக இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களின் 38வது நினைவு நாளைப் போற்றும் இக்கூட்டத்தின் வாயிலாக அவர் கண்ட சாதி பேதமற்ற, சம உரிமை கொண்ட, மனிதனை மனிதம் சமமாகப் போற்றும் சமூகமாகத் தமிழர் இனத்தை உருவாக்குவோம் என்று நாம் தமிழர் கட்சி சூளுரைக்கிறது.

தீர்மானம் 2

எம்.ஜி.ஆர். வழியில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்போம், வெல்வோம்!

தமிழக மக்களின் ஈடினயற்ற செல்வாக்குப் பெற்றவராகவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலராகவும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக மூன்று முறை தொடர்ந்து 13 ஆண்டுக் காலம் பதவி வகித்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் மீது எந்த அளவிற்கு கருணையும், அவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவராகவும் இருந்தாரோ, அதற்கு இணையாக ஈழத் தமிழரின் மேலும் கருணையுடனும், அவர்களின் நல்வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவும் இருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தங்களின் உள்ளூர் அரசியலுக்கு கருவியாக்கிய, உணர்ச்சி அரசியல் நடத்திவந்த தலைவர்களுக்கு இடையே, அவர் தெளிவான சிந்தை கொண்டவராகத் திகழ்ந்தார். அதன் விளைவே, தமிழீழ விடுதலையில் அயராமல் உறுதியாக இருந்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தேர்வு செய்து அமரர் எம்.ஜி.ஆர். முழு ஆதரவு அளித்தார்.

தமிழர் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரிடையாகச் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படையாக நல்கியதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டம் கடும் சோதனைக்கு உட்பட்ட போதெல்லாம் அளப்பரிய நிதியுதவி அளித்து அந்தப் போராட்டம் தொடர துணை நின்றார். இராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடக்கப்படும் நினை ஏற்பட்டபோதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தொடர்ந்து ஆதரிப்பவராகவும், தமிழீழ விடுதலையே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிரந்தர உரிமையைப் பெற்றுத்தரும் என்பதிலும் எம்.ஜி.ஆர். தெளிவாக இருந்தார்.

அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் 24வது நினைவு நாளான இன்று, அவரது வழியில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி என்றென்றும் நிற்கும் என்ற உறுதியை மேற்கொள்கிறது.

தீர்மானம் 3

முல்லைப் பெரியாறு அணை: கேரளத்தின் பக்கம் சாய்கிறது மத்திய அரசு!

முல்லைப் பெரியாறு அணை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், மத்திய அரசு இப்பிரச்சனையில் அவசியமற்ற முடிவுகளை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணையின் திடத்தன்மையை சோதித்து வருகிறது. இக்குழு ஜனவரியில் அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிடுவது என்பதிலேயே குறியாக உள்ள கேரள அரசின் திட்டங்களுக்குத் துணைபோவதுபோல், தேச பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அவசரநிலைக் குழுவை அமைத்துள்ளது. நிலநடுக்கம், பெருவெள்ளம் ஆகியவற்றால்பாதிப்பு ஏற்படலாம் என்றஎதிர்ப்பார்ப்பில்தான்

இப்படிப்பட்ட ஒருஅவசரநிலைக் குழு நியமிக்கப்படும். ஆனால், அப்படிப்பட்ட அவசரநிலை ஏதும்முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாகஇல்லாத நிலையில், எதற்காக அவசரநிலைக்குழுவை மத்திய அரசு அமைக்கிறது?இக்குழுவின் உறுப்பினராக கேரளத்திற்குஆதரவாக ஆதாரமற்ற தகவல்களைக்கூறிவரும் ரூர்க்கி பேராசிரியர் டி.கே.பால்என்பவரை நியமித்திருப்பது கேரள அரசின் உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேஎன்பதில் எள்ளவும் ஐயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு குழுவைஅமைத்திருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிரானதும் ஆகும்.

இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் எழுதிய ஒரு கடிதத்திற்குக் கூட பிரதமர்மன்மோகன் சிங் பதலளிக்காமல் மெளனம் சாதிப்பது அவருடைய ஒருதலைப்பட்சமான பார்வையையே உறுதி செய்கிறது.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்கவே முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசுசெயல்பட்டு வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழக மக்களின் ஒன்றுபட்டபோராட்டத்தால் கலக்கத்தில் உள்ள மத்திய, கேரள அரசுகள், இப்பிரச்சனையைநீதிமன்றத்தின் பிடியில் இருந்து வெளிக்கொணர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இதனை நன்குணர்ந்து தமிழக மக்களும், தமிழக அரசும் உறுதியாக போராட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4

தமிழ்நாட்டிற்கு நீரிணை தடுக்கும் கேரளத்திற்கு சோற்றைத் தடுப்போம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தடுக்க தனதுநீர்பாசன சட்டத்தில் திருத்தம் செய்த கேரள அரசின் அடாத செயலைக்கண்டிக்கும் முகமாகவே, கேரளத்திற்கு எந்த பொருளும் செல்லாமல்தடுக்கும் போராட்டத்தை தமிழக மக்கள் எல்லைப் பகுதியில் நடத்திவருகிறார்கள். ஆயினும் கேரள அரசும், அரசியல்வாதிகளும் தங்களைபோக்கை மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை.

எனவே தமிழ்நாட்டுமக்கள் தொடர்ந்து போராடித்தான் தீர வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு நீரிணை முற்றிலும் மறுக்கும் நோக்குடன் செயல்பட்டுவரும்கேரள அரசையும், அங்குள்ள அரசியல்வாதிகளையும் நேர்மையான வழிக்குக் கொண்டு வர, கேரளத்திற்குச் செல்லும் உணவுப் பொருட்களை தடுக்கும்போராட்டத்தில் செங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி கடந்த 19ஆம் தேதி சாலைமறியலில் ஈடுபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சீமானும் அவரோடு 300க்கும் அதிகமானோரும் அன்று கைதாகினர்.

கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 26ஆம் தேதிகோவை மாவட்டம் வாழையாறு சோதனைச் சாவடி அருகிலும், அடுத்தநாள் – 27ஆம் தேதி தேனி மாவட்டம் கூடலூரிலும் சாலை மறியல்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும்.

நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெறும்.

இதில் தமிழர்கள் பெருந்திரளாககலந்துகொண்டு கேரளத்திற்கு பாடம் புகட்ட முன் வர வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 5

கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரிபோராடிவரும் அப்பகுதி மக்கள் எழுப்பிய வினாக்கள் பலவற்றிற்கு நேரடியாகபதிலளிக்காமல், அது அரசு இரகசியம் தொடர்பானது என்று கூறிமழுப்பிவரும் மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை திசைதிருப்ப பல பொய்ப் பரப்புரைகளைச் செய்து வருகிறது. ஆனால் மத்தியஅரசின் பரப்புரைகள் எதுவும் உறுதியாகப் போராடும் மக்களை சற்றும்அசைக்கவில்லை.

தங்கள் வாழ்விற்கு அச்சுறுத்தலாகவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை அம்மக்கள் பார்க்கிறார்கள். இந்த நிலையில், அணு மின் நிலையத்தை இயக்கத் தொடங்கும்முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மக்களின் அச்சத்தைப்போக்கும்வரை அணு மின் நிலைய இயக்கத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின்தீர்மானத்தை புறக்கணிக்கிறது.

இரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன் சிங்,மேலும் ஒரு டசன் அணு உலைகள் வாங்கி இந்தியாவில் நிறுவப்படும் என்று அந்நாட்டு அரசுக்கு உறுதியளித்துள்ளார்.

அது மட்டுமின்றி, கூடங்குளம் அணு மின்நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர்அறிவித்திருப்பது மக்களின் அச்சத்தைப் போக்குவோம் என்று அளித்த உறுதிமொழிக்கு எதிரானதுதாகும். நாட்டு மக்களின் வாழ்வை விட அணு உலைவாங்கிக் குவிப்பதிலேயே பிரதமர் குறியாக இருப்பது மத்திய அரசின் மக்கள் விரோதநிலையையே உறுதி செய்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குஎதிராக வலுப்பெற்றுவரும் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கவே, எவ்வித அடிப்படையுமின்றி கேளர அரசும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிட்ட முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை மத்திய அரசும் முக்கியத்துவம் கொடுத்து தூண்டி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள நிலையில், கேளர அரசும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிடும் தமிழினத்திற்கு எதிரான வன்முறையை மத்திய காங்கிரஸ் அரசு எந்த விதத்திலும் கண்டிக்கவில்லை. மாறாக, பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறி பிரச்சனைக்கு உயிரூட்டுகிறது.

இதனை தமிழக மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கூடங்குளம் போராட்டத்தை திசை திருப்புவதற்கும், அப்போராட்டத்தில் இணைந்து ஈடுபட்ட இரு மாநில மக்களையும் பிரித்தாளவே முல்லைப் பெரியாறு பிரச்சனை ஊதிப் பெரிதாக்கப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்க வேண்டுமா அல்லது மூடப்பட வேண்டுமா என்பதை அப்பகுதியில் வாழும் மக்கள் தீர்மானிக்க மத்திய, மாநில அரசுகள் விட்டுவிட வேண்டும். கூடங்குள மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும், அவர்களின் போராட்டதிற்கு இறுதி வரை துணை நிற்கும்.

தீர்மானம் 6

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அவசியமில்லை!

பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் வசதி கொண்ட சில்லரைவர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கமுற்பட்டுள்ளதும், அதற்கு எதிர்க்கட்சிகள், வணிகர்கள், அறிவார்ந்த பொது மக்கள் ஆகியோரிடமிருந்த வந்த எதிர்ப்பின் காரணமாக தற்காலிமாகநிறுத்தி வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி, அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு ஜனநாயகஅரசியலிற்கும், மக்கள் நலனிற்கும் எதிரானது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழிவிடுவதன் மூலம், இந்நாட்டிற்கு வந்த பெரும் விற்பனை மையங்களை உருவாக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள், பொருட்களை சந்தைக்கு வேகமாகக் கொண்டு வரக்கூடிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவார்கள்,

அதன் காரணமாகஉற்பத்தியாகும் இடங்களில் இருந்து சந்தைக்கு பொருட்களை கொண்டு வருவதில் தற்போது நிலவும் சிக்கல்கள் தீரும் என்று மத்திய அரசுகூறுகிறது. அப்படியானால், உற்பத்தியாகும் இடங்களில் இருந்து அவைகள் சந்தைக்கு வருவதில் உள்ள முட்டுக்கட்டைகளை இத்தனையாண்டுக் காலஆட்சியில் நீக்கத் தவறியது ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்திறமையின்மையையும் தோல்வியைத்தானே காட்டுகிறது?

சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை உலகதரத்திற்கு உயர்த்துவதில் வெற்றி கண்டுள்ளதாக கூறும் காங்கிரஸ் அரசு, உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை சந்தைக்குக் கொண்டுவரத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தவறியதுஏன்? விடுதலைப் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைஇருப்பதற்கு அரை நூற்றாண்டுக் காலமாக

ஆட்சி செய்த காங்கிரஸ்அரசுதானே முக்கியக் காரணம்? இந்த இயலாமையை மறைக்கு அந்நியநேரடி முதலீடா? இது ஏற்கத்தக்கதல்ல. அந்நிய நேரடி முதலீட்டுடன் அமைக்கப்படும் விற்பனை மையங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று கூறுவது மாயை. அயல் நாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் சேவையாற்ற வரவில்லை, உள்நாட்டுப் பெரு நிறுவனங்களைப் போல் கொள்ளை இலாபம் ஈட்டவே வருகின்றன. எனவே இதிலும் மத்திய அரசு பொய்யுரைக்கிறது.

நமது நாட்டில் சில்லரை விற்பனையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 5கோடிக்கு மேல். இவர்கள் அளிக்கும் வேலை வாய்ப்புகள் 20 கோடிக்கும்அதிகம். இந்த சூழலில் அந்நிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பது வேலை வாய்ப்பையும், உள்ளாட்டு மக்களின் வணிக உரிமையையும் ஒரு சேர பறிப்பதாகும். எனவே இதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கும்.