மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

17

மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர்
கட்சி வேண்டுகோள்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது தம்பிகள்
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்
என்பது தமிழர்களின் ஒட்டு மொத்த நியாய உணர்வாகும். அதோடு தூக்குத்
தண்டனையை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும் என்பது நமது மனிதாபிமான
கோரிக்கையாகும். இந்த உணர்வை ஒவ்வொரு தமிழரும் வெளிப்படுத்த 9282221212
என்ற அலைபேசி எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பை (மிஸ்ட் கால்) கொடுக்குமாறு
தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்த அழைப்புகளின் எண்ணிக்கையை www.averzs.com என்ற இணையத் தளத்தில்
காணலாம். நமது அன்பிற்கினிய மூன்று தம்பிகளின் உயிரைக் காக்க பல்வேறு
வகைகளின் முயன்றுவரும் நாம், இந்த கடமையையும் தவறாமல் செய்திட
வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம், கைது – படங்கள் இணைப்பு
அடுத்த செய்திஉச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை காண்க – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்…