பெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு.. இவர்களை நினைவு கூறும் பொருட்டு, 24 திசம்பர் 2011 அன்று வட சென்னை, மிண்ட், தங்க சாலையில் நாம் தமிழர் கட்சியினர் பொது கூட்டம் நடத்தினார்கள்.. அங்கு கட்சியின் நிறுவனர் சீமான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியத்தின்
செய்தி:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத் தமிழனுக்கு தனி தேசம் கிடைத்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்றிரவு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழனுக்கு தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காதது தான் வரலாற்று துயரம்.
இன்று தமிழர்களால் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியவில்லை. காவிரி நீர் தர மறுக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரத்திற்கு ஒருமாதிரி பேசுகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் தமிழகத்தில் மலையாளிகள் யாரும் இருக்க முடியாது. இங்கிருந்து தான் கேரளாவுக்கு காய்கறிகள் செல்கிறது. தொடர்ந்து சேட்டை செய்து வந்தால் கேரள மாநிலத்தவர்கள் காய்கறிகளை கண்ணால் பார்க்க முடியாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை அவர்கள் சிக்கலாகக் கருதினால் எதிர் விளைவுகள் ஏற்படும் என்றார்.
நன்றி – thatstamil.com