பண்ருட்டி நாம்தமிழர் கட்சி சார்பில்-கண்டன ஆர்பாட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு!!

343

கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி நகர  மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் சார்பாக நாம்தமிழர் கட்சி சார்பில் கேரளவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்தும்,  முல்லை பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரளா அரசை கண்டித்தும், கடந்த  27.12.2011 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் பண்ருட்டியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி நகர அமைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் முன்னிலை வகித்தார். பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் வரவேற்றார்.  நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆன்றோர் குழு உறுப்பினர் திரு.பாப்பாத்தி ராமமூர்த்தி அவர்களும், திட்டகுடி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜசேகர் அவர்களும், நெய்வேலி நகர ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், முத்து.அசோகன், முதனை செம்புலிங்கம், ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். செய்திதொடர்பாளர் வெற்றிவேலன் நன்றி கூறினார். ஆர்பட்டதிற்கான ஏற்பாடுகளை அண்ணாகிராமம் ஒன்றிய ஒருங்கிணப்பாளர் வீரகண்டமணி, பண்ருட்டி அருண் ஆகியோர் செய்தனர்.  ஆர்பாட்டத்தில் கேரளா அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.

நன்றி:
அ. வெற்றிவேலன்
செய்திதொடர்பாளர்,
பண்ருட்டி.
நாம் தமிழர் கட்சி.

துண்டறிக்கை:

படங்கள்:

முந்தைய செய்திமுல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு – தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது!! அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை