நாம் தமிழர் சேலம் மாவட்டம் – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா: படங்கள் இணைப்பு

35

தமிழர் எழுச்சி நாள் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா:              திருவள்ளுவராண்டு 2042  நளித் திங்கள் 10ம் நாள் (நவம்பர் 26 , 2011 ). 
            தலைவன் பிறந்தான் தமிழன் நிமிர்ந்தான் என்ற சொல்லிற்கு ஏற்ப உலகிற்கு  தமிழினத்தை அடையாளம் காட்டிய ஒப்பற்ற மாபெரும் தலைவனின் பிறந்த நாளை சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில்  நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை வெகு சிறப்பாக முன்னெடுத்துக்  கொண்டாடியது.   . இதன் தொடர் நிகழ்ச்சியாக  சேலம் மாநகரம் நெத்திமேடு பகுதியில் மகளிர்களுக்கான கோலப்போட்டி நடத்தி  மகளிர்களுக்கு  தமிழரின் தொண்மை வரலாற்றையும், வரலாறு படைத்த  தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை  பற்றியும் எடுத்து கூறி மகளிரை  ஊக்குவித்து புரட்சிகரமான வாழ்த்துகளுடன் போட்டியில்  வெற்றி பெற்ற மகளிர்களை  பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
    இவ்விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மகளிர்களுக்கு  பரிசுகள் வழங்கிய  சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உறவுகள்.

பள்ளப்பட்டி சிவகுமார், பேராசிரியர் பாண்டியராசன், சேலம் செந்தமிழ்தேனீ, வழக்குரைஞர் ராசா, நங்கவள்ளி மணிகண்டன், மேச்சேரி அருண், புதுச்சாம்பள்ளி ஜெயபிரகாஷ்.

 

படங்களைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

முந்தைய செய்திகரூர் நாம் தமிழர் கட்சி – தமிழர் எழுச்சி வார விழா – படங்கள் இணைப்பு
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு அணையை பற்றி அறியாத உண்மைகள் – அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி