நாம் தமிழர் கட்சி – கோபி: மாவீரர் நினைவேந்தல் நாள் கூட்டம் (படங்கள் இணைப்பு)

63

ஈரோடு மாவட்டம், கோபி ஒன்றியம், அளுக்குளி ஊராட்சி மையக்கிளை சார்பாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று மாவீரர் நினைவேந்தல் நாள் நினைவு கூறப்பட்டது. இக்கூட்டத்திற்கு திரு.க. செந்தில் தலைமை தாங்கினார். திரு. மு.ராமு முன்னிலையும், திரு. பிரகாசு வரவேர்ப்புரையும் நிகழ்த்தினர். ஈழத்தின் வரலாறு குறித்து திரு. ரத்தினசாமி (இளைஞர் பாசறை) அவர்களும், ராசபக்சே நிகழ்த்திய கொடூரங்களை திரு. அர்ச்சுனன் (நம்பியூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்) அவர்களும், விடுதலைப்புலிகள் பற்றியும், கரும்புலிகள் பற்றியும், விடுதலைபுலிகள் மனிதநேயமிக்கவர்கள் என்பதனைப் பற்றியும் திருமதி. குமுதவல்லி அவர்கள் சிறப்பிறை ஆற்றினார். நிகழ்ச்சியின் கடைசியாக திரு. வெங்கட் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் பொதுமக்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படங்களைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா…
அடுத்த செய்திகுடந்தையில் நாம் தமிழர் கட்சியின் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம்