காலி நாற்காலிகளை நிரப்ப உட்காந்த இராணுவத்தினர்: காமெடி !

24

கடந்த திங்கட்கிழமை அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற இந்தியாவின் முந் நாள் வெளியுறவுச் செயலர் சிஷாம் சரன் அவர்கள் வந்திருந்தார்.

அவர் 2004- தொடக்கம் 2006ம் ஆண்டு வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு விடுத்த அழைப்பை ஏற்று அவர் யாழ் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்த வந்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் அவர் உரையக் கேட்க்கச் செல்லவில்லை. பல்கலைக் கழக மாணவர் சமூகம் ஒட்டுமொத்தமாகவே இவர் உரையைப் புறக்கணித்தது. இதனால் மண்டபத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருந்தது. சில விரிவுரையாளர்கள் விடுத்த கோரிக்கைகளைக் கூட மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நிலையைப் புரிந்துகொண்ட இராணுவத்தினர் உடனடியாக தமது சகாக்களைக் கொண்டு வந்து காலியாக இருந்த நாற்காலிகளில் உட்காரவைத்துள்ளனர் இடத்தை நிரப்புவதற்காக. மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்ற வந்த திரு ஷரன் அவர்கள் இராணுவத்தினருக்கு உரையாற்றிவிட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

–நன்றி அதிர்வு இணையதளம்

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1127

முந்தைய செய்திகூடங்குளம் மக்கள் போராட்டத்தை அவமதிக்கிறார் நாராயணசாமி: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்தி210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?