திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

43

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக முருகன், சாந்தன், பேரறிவாளனின் உயிர் குடிக்குத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசை கண்டித்தும், தமிழகமக்களின் உணர்வை மதித்து தமிழக அமைச்சரவையைக்  கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றக்கோரி மாநில அரசை வலியுறுத்தியும்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று 9.11.2011  மாலை 5 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூவர் விடுதலை குறித்து மத்திய அரசின் முடிவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி,மக்களுக்கு இப்பிரச்சனையை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட அமைப்பாளர்கள் திரு செல்வம், திரு சமரன் பாலா தலைமையில் , திரு பரமசிவம் மற்றும் திரு கௌரிசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் காங்கேயம் ஒன்றிய அமைப்பாளர்கள் சண்முகம்,  ராசா, வெள்ளகோவில் ஒன்றிய அமைப்பாளர்கள் கோபாலக்ரிட்டிணன்,தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் சுரேசு,அவினாசி ஒன்றிய அமைப்பாளர் தமிழன் வடிவேலு,மகளிர் அணி அமைப்பாளர்கள் குமுதவல்லி,பபிதா பானு ,மகேசுவரி மற்றும் இளைஞர் பாசறை தோழர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்