நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்

27

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்

அண்ணன் செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு

வணக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு,

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் அமைந்திருக்கும் சிறப்புமுகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான உங்களின் குரல் பலபுதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கிறது.அதிலும் அந்த சிறப்புமுகாம்களுக்குள் வாடிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி நீங்கள் விடுத்துள்ள அறிக்கை ஏதோஒரு ஒளிக்கீற்றை அவர்களின் இருள்சூழ்ந்த வாழ்வுக்குள் ஒளிபாய்ச்சியிருக்கும்.

சகோதரன் தனது இன்னொரு சகோரத்துக்கு செய்யும் உதவிக்காக நன்றியை எதிர்பார்ப்பது இல்லைத்தான். தொப்புள்கொடி உறவுக்குள் ஒருதாயின் உறவுகளாக ஒருமித்து நிற்கும் எமக்குள் நன்றி என்ற வார்த்தை ஒருவிதமான அந்நியத்தை உருவாக்கிவிடும் என்றாலும்கூட, வேறெந்த வார்ததைகளும் தமிழில் இல்லாத காரணத்தால் ‘நன்றி’ என்ற வார்த்தையால் உங்களை வணங்குகின்றோம்.

இரு தசாப்பதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் சிறப்புமுகாம்கள் என்பவை ஒருவிதமான இருண்டபக்கமாகவே இருந்திருக்கிறது.எப்போதோ ஒருமுறை சிறப்புமுகாமில் இருப்பவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பொழுதில் மட்டும் பத்திரிகைகளின் பார்வையிலும் அரசியல்வாதிகளின் அருட்பார்வையிலும் இடம்பிடித்து விட்டு உடனே மறக்கப்படும் தடுப்புமுகாம்கள் இவை.

எங்கிருந்தோ வந்திருக்கும் பாலஸ்தீனர்களுக்கும், தீபேத்தியர்களுக்கும், கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும், வங்காளிகளுக்கும் அடைக்கலம்கொடுத்து வாழவைத்திருக்கும் தமிழகம் தனது சொந்த மொழிபேசும் சகோதரர்களை மட்டும்சிறப்புமுகாம்கள் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்திருக்கும் அவமானம் இனியும் வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை பல குடும்பங்களின் வேதனைக்கும்இஏக்கத்துக்கும்இவேதனைக்கும் ஒரு முடிவுகட்டி அவர்கள் வாழ்வில் ஓன்றிணையவழிவகுக்கும் என்று நம்புகின்றோம்.

ஒரு தேசியபிரச்சனை என்றாலும்சரிஇபோர்க்குற்றம் போன்ற சர்வதேச பிரச்சனை என்றாலும் சரி அவற்றில்காட்டும் வேகத்தையும் ஆழத்தையும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்புமுகாம் விடுதலையிலும் நீங்கள் காட்டியிருப்பது உங்களை சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து மிகவும் வித்தியாசமானவராக எமக்கு காட்டுகின்றது.உங்கள்மீது நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

தமிழினம் எழுச்சி கொள்ளவும், தமிழீழதாயகம் மலரவும் நீங்கள் நடாத்தும் அனைத்து செயற்பாடுகளிலும்இபோராட்டங்களிலும் தமிழீழ புரட்சிகர மாணவராகிய நாமும் ஒரு சகோதர சக்தியாக என்றும் இணைந்து நிற்போம் என்று உறுதிதெரிவிக்கின்றோம்

நன்றி

நாங்கள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

தலைமை ஒருங்கிணைப்புக் குழு

பிரித்தானியா

06/10/2011

முந்தைய செய்திசிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
அடுத்த செய்திஐம்பெரும் விழா -திருச்சி