நீதிக்கான நடைபயணம் – சீமான் கைது

48

பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை நீக்கும்படிகேட்டும், தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி கூறியும் நாம் தமிழர்அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குகொண்ட நடைபயணம் இடைவழியில் காவல்துறையால் தடுக்கப்பட்டு,சீமானும் பல நூற்றுக்கண்கான தமிழ்உணர்வாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இன்று அதிகாலையிலிருந்தே வேலூர் நகரத்தில் தமிழகத்தின் பல திக்குகளில் இருந்தும்,கன்னடா மாநிலத்திலிருந்தும் ஏராளமான தமிழ்உணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன் பதாகைகளுடன் குழுமத்தொடங்கினர்.மிகஅதிகமான தமிழ்இளைஞர்களும் இதில் எழுச்சியுடன் இணைந்திருந்தனர்.

காலை பதினொருமணியளவில் வேலூர்நகரத்தில் இருந்து சென்னையை நோக்கிய நீதிக்கான நடைபயணம் ஆரம்பமாகியது.நடைபயணத்தின் முன்னணியில் நாம்தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நாம் தமிழர் உறவுகளும் வந்துகொண்டு இருந்தனர்.இவர்களின் பின்னால் ஈழுவிடுதலையை வென்றொடுப்போம்,மரணதண்டனையை நீக்கு போன்ற பதாகைகளுடன் அணிவகுத்து கொத்தொலி எழுப்பியவண்ணம் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தனர்.

வேலூர்நகரத்தின் சாலைகளை கடந்து ஏறத்தாள 5கிமீ தூரம் நடைபயணம் நகர்ந்து சென்னைக்கான நெடுஞ்சாலையில் நடைபயணம் ஏறியபோது அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலைகள் மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.மத்தியஅரசு இந்த நடைபயணத்தை தெடுஞ்சாலையில் தொடர அனுமதிக்கவில்லை என்றுகூறி சீமானையும் பலநூற்றுக்கணக்கானோரையும்
கைதுசெய்தனர்.

அனைவரையும் காவல்துறைவாகனங்களில் ஏற்றி அருகில் இருந்த கல்யாணமண்டபங்களில் தடுத்துவைத்து பெயர்விபரங்களை பெயர்விபரங்களை குறிப்பெடுத்தனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். நடைபயணம் தடைசெய்யப்பட்டுவிட்ட போதிலும் சென்னை எம்.ஜி;.ஆர்நகரில் ஏற்பாடு
செய்யப்பட்ட பொதுக்கூட்டம் குறித்ததிகதியில் நடைபெறும் என்றே அறியத்தந்துள்ளார்கள்.