21.06.2011 செவ்வாய்கிழமை அன்று அறிஞர் வே.ஆணைமுத்துவின் 87-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேரறிவாளன் கல்வி பாசறையின் சார்பாக அரசு சார்ந்த மாணவர்களின் கல்விக்காக குறிப்பேடுகள் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட 150 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரறிவாளன் கல்வி பாசறையின் ஆதரவாளர் திரு.வி.ஆர்.மணிவண்ணன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடுகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் திரு.மு.ஜெயபிரகாசு, மா.பே.பொ.க., காஞ்சி நகர செயலாளர் மற்றும் பேரறிவாளன் கல்விப் பாசறையின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
பேரறிவாளன் கல்வி பாசறையின் நிறுவனர் திரு.பூ.கா.பொன்னப்பன் நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது.
பேரறிவாளன் கல்விப் பாசறையின் சார்பாக குருதி கொடை காஞ்சி மீனாட்சி மருத்துவமனையில் வழங்கப்பட்டது. லோ.மதன் அவர்கள் குருதி கொடை வழங்கினார்.
தொடர்புக்கு : 9789183545