[படங்கள் இணைப்பு] நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

50

நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருச்செங்கோடு நகரில், அண்ணா சிலை அருகில், பெட்ரோலியபொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து, 03 -07 -2011 காலை 10 .00 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா. செந்தில்குமார் தலைமை தாங்கினார், மருத்துவர் பா. பாஸ்கர் முன்னிலை வகித்தார், திருச்செங்கோடு பொறுப்பாளர் சாமிநாதன், யோககுமார், பிரகலாதன், ராஜேந்திரன், குமாரபாளையம் பொறுப்பாளர் வெங்கட், பரமத்தி வேலூர் பொறுப்பாளர் குப்புசாமி, ராசிபுரம் பொறுப்பாளர் பத்மநாபன், இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் மருத்துவர் வீ. உதயசங்கர்,  நவலடி மற்றும் பேரளவில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல், டீசெல், மண்எண்ணெய் , சமையல் எரிவாயு விலையேற்றத்தை  ஏற்படுத்திய மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, கண்டித்து சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்
அடுத்த செய்திபேரறிவாளன் கல்வி பாசறையின் சார்பாக மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.