திருச்சிராப்பள்ளியில் நாம்தமிழர் கட்சியினர் சார்பாக இளைஞர்களுக்கு சிலம்பப்பயிற்சி வழங்கப்பட்டது.

19

03-07-2011 ஞாயிறு அன்று திருச்சிராப்பள்ளி நாம்தமிழர் கட்சியின் சார்பாக மணிகண்டம் ஒன்றியத்தில் மாலை 4.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரால் மாலை 5 மணிக்கு சிலம்ப பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வர்த்தகப்பிரிவு செயலாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் சிலம்பப் பயிற்சியை துவங்கி வைத்தார். தலைமை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு. முன்னிலை மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சுப.மணிகண்டன், மணப்பாறை ஒன்றியம் கிருட்டினன், மருங்காபுரி ஒன்றியம் செல்வராசு, திருவெரம்பூர் ஒன்றியம் புவனேசுவரன், புறநகர் மாவட்ட செயலாளர்மனோகரன் , பயிற்சியாளர் மாநகர இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி.

இந் நிகழ்வில் அப் பகுதி நாம் தமிழர் களப்பணியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சிலம்பு பயிற்சியை மேற்கொண்டனர் .

முந்தைய செய்திதமிழன் தொலைகாட்சியில் “இலங்கையின் கொலைக்களம்” சானல் 4 ஆவண படம் குறித்த விவாதம். செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன், மணிவண்ணன் ஐயா, பேராசிரியர் தீரன் பங்கேற்ப்பு.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்