சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர் .
இந் நிகழ்வில் திருநங்கைகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அணைந்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர் .
தமிழக தலைவர்கள் அய்யா நெடுமாறன், அய்யா காசி ஆனந்தன், செந்தமிழன் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் தமிழர்கள் அனைவரும் சாதி,மதம்,கட்சி பேதங்களை கடந்து தமிழர் என்ற ஒற்றை உணர்வுடன் கலந்துகொண்டனர்.