கோத்தபாய ராஜபக்சேவிற்கு ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை

19

இலங்கை கட்டுநாயக்காவில் பொதுமக்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினை முறியடிப்பதற்கு மிதமிஞ்சிய படை பலத்தை பயன்படுத்தியது தொடர்பில் ஜேர்மன் தூதுவர் கோத்தபாயவை எச்சரித்துள்ளார்.

பல நாடுகளில் போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறையினர் பயன்படுத்தபப்டுகின்றனர். ஆனால் அது வன்முறைகளாக மாறிவிடுவதுண்டு. எனினும் சிறீலங்காவில் அளவுக்கதிகமான படை பலம் பயன்படுத்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் உள்ள சுதந்திரவர்த்தகவலையத்தில் பல ஜேர்மன் நிறுவனங்கள் உள்ளன. சிறீலங்கா காவல்துறையினரின் பிரசன்னம் அந்த நிறுவனங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது. தொழிலாளர் மீதான தாக்குதலுக்கு சிறப்பு அதிரடிப்படையினரும் பயன்படுத்தப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

முந்தைய செய்திசிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்
அடுத்த செய்திஅனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் – பெங்களூரூல் துவங்கப்பட்டது.