இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்

27


ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கை அரசால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் சீமான்

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.


“சித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“.என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ஆம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல்இ மனரீதியாக பாதிப்பது பட்டினி போடுவது சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல் வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல் காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல் மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது ராஜபக்ச இனவெறி அரசு. போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.


இரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர்.


தொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.


சிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்?

எனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்தி நிற்போம்.

சிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும்.­­­­­


முந்தைய செய்திதமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை
அடுத்த செய்திசூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்.