ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

835

2007 முதல் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிங்கள இனவெறி அரசு ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுப்பட்டது. அதில் ஒரு பகுதியாக மே 18 2009 அன்று மட்டும் நாற்பதாயிரதிற்கு மேற்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள் சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு இனவெறி அரசு இப்போரில் வென்றதாகவும் அறிவித்தது.  இந்த நாள் தமிழின விடுதலை போராட்டத்தில் ஒரு கருப்பு தினமாகும்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களும் போராளிகளும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து தமிழீழ விடுதலைக்கு வித்திட்டுள்ளனர். அந்த உன்னத லட்சியத்தை மனதில் ஏற்று தாய் தமிழகத்தில் கடந்த ஆண்டு 2010 செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது,  அதன் பின் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் தமிழர்களுக்கான அரசியல் அல்ல என்பதை உணர்ந்து தமிழ் தேசியத்தை முன்வைத்து நாம் தமிழர் இயக்கம் கட்சியாக உருமாறியது.நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்தில் இருந்தே தமிழின விரோத தி.மு.க அரசால் பல அடக்குமுறைகளை சந்தித்தது.

எம் மாவீர்களின் மூச்சு காற்றை சுமத்து நடக்கும் எமது இயக்கத்தை எந்த அடக்குமுறையும் அழித்துவிட முடியாது என்பதை சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை தகர்த்து 7 மாத தனிமை சிறைக்கு பின் மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வந்து, சீமான் 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63  தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிராய் அதன் தமிழின விரோத போக்கை மக்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டனர். சீமானின் பிரச்சாரத்தின் உக்கிரம் தாங்காமல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் அன்பு அண்ணன் சீமானுக்கு என்று ஒரு கடிதத்தை தீட்டினார். அதில் சீமான் தனது தொகுதிக்கு மட்டும் வந்து பிரசாரம் மேற்கொள்ளவேண்டாம் என்றும்,  தான் தமிழினத்திற்கு எதிராக எந்த செயலிலும் எடுப்பட போவது இல்லை என்று கூறி இருந்தார்.

காங்கிரஸ் கட்சி தங்கையின் கடிதத்தை சீமான் ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சி தமிழினத்திற்கு எதிரான கட்சி அதில் யார் இருப்பினும் அவர்களை தோற்கடிப்பதே லட்சியம் என்று அங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சீமானின் அனல் பிரச்சாரமும் நாம் தமிழர் கட்சியின் களபோராளிகள்,தமிழ் உணர்வாளர்களின் தீவிர செயல்பாடுகளுமே காங்கிரஸ் கட்சியின் 2011 சட்டமன்ற தேர்தலில் அதன் படுதோல்விக்கு காரணமாய் அமைந்தது.

தமிழின அழிப்பின் பின் 2 ஆண்டுகள் கழித்தே இது சாத்திய பட்டது அதற்கு முக்கிய காரணம் நாம் தமிழர் கட்சி அரசியல் வடிவம் பூண்டதே.

ஆதே சமயத்தில் ஐ.நா தனது போர்குற்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஆதரித்து தமிழ் நாட்டில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு ராஜபக்சேவை தூக்கிலிட்டு இந்திய அரசை போர்குற்ற அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக நாளை மே 18 வேலூரில் ஐ.நா அறிக்கைக்கு ஆதரவாகவும் இன்றும் முள் கம்பிக்குள் அடைபட்டு கிடைக்கும் தமிழீழ மக்களையும் வேலூரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கம்பிக்குள் வாடி கிடக்கும் தம்பிகளையும் மீட்டெடுக்கும் லட்சியத்திற்கு உரமேற்றும் வகையில் நடைபெற இருக்கும் இப்பொதுக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினரும், மாற்று அரசியலை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்.


முந்தைய செய்திவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் பகுதிகளில் மே 18 பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த செய்திவட சென்னை ராயபுரம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பாதகை மற்றும் சுவர் விளம்பரங்கள்