[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.

57

கு. முத்துக்குமார் நினைவு கோப்பை சடுகுடு போட்டியினை துவக்கி வைத்து செந்தமிழன் சீமான் சிறப்புரை:

28.05.2011 அன்று தூத்துக்குடி திருவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில்,இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அலைமகன் என்ற பிரபு அவர்களின் ஆலோசனையின் படி தியாக எழுச்சி சுடர் கொளுவைநல்லூர் கு.முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான சடுகுடு போட்டி நடைபெற்றது. சடுகுடு போட்டியினை துவக்கி வைத்து சிறப்பான எழுச்சியுரையாற்றினர் செந்தமிழன் சீமான்.

செந்தமிழன் சீமான் தனது எழுச்சியுரையில்

கலை ,இலக்கியம் என்பது மக்களிடம் புரட்சி ஏற்படுத்தும் ஊடகம். சடுகுடு வீரத்தமிழர் விளையாட்டு வென்று மானத்தை நிலைநாட்டு என்று தமிழகம் முழுவதும் ,இவ்விளையாட்டுப் போட்டியினை நடத்த உள்ளோம். தைத்திருநாள், ,இனம் காக்க போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவு நாட்கள் போன்ற தினங்களில் அனைத்து மாவீரர்களின் பெயரில் ,இப்போட்டிகள் நடைபெறும்.

அர்ப்பணிப்பு செய்தவர்களின் நினைவு போற்றுதல் தமிழர்கடமை. சடுகுடு, சிலம்பம், தமிழர் தேசியத்தின் விளையாட்டு, தமிழர் தேசிய விளையாட்டுக்கள் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கிறது. தமிழர் கலைகளான நாடகம், கரகாட்டம், பாவை கூத்து ,இவற்றை திரைப்படம் எனும் பூதம் தின்றுவிட்டது. நாடக கலைஞர்கள் நலிந்த நாடக கலைஞர்கள் என்று உதவி தொகை வாங்கி முடங்கி கிடக்கும் நிலைதான் இன்று.

தமிழ் தேசிய ,இனத்தின் விளையாட்டுக்களை கிரிக்கெட் என்ற மட்டைபந்து விளையாட்டு தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது. மட்டைப்பந்து (கிரிக்கெட்) சூதாட்டமாக மாறிவிட்டது. தமிழன் விளையாட்டு வீர விளையாட்டு. தமிழன் மட்டுமே நேருக்கு நேர் எதிரியை நிற்க வைத்து சந்திக்கும் வீர விளையாட்டுக்களை விளையாடினான். மட்டைப்பந்து (கிரிக்கெட்) மேல்தட்டு மக்களால் விளையாடும் விளையாட்டு. நீளம் தாண்டுதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல் 1500 மீட்டர் ஓடுதல போன்ற எந்த விளையாட்டையும் மேல்தட்டு மக்கள் விளையாடுவதில்லை.

மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டினை கைவிட்ட நாடுகள் தான் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகமான பதக்கங்களை வாங்கி குவிக்கிறது.

5000 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ்த் தேசிய விளையாட்டு சடுகுடு. மரபு விளையாட்டு ,இன்று , இறந்து கிடக்கிறது. தமிழர் உடன்பிறந்த போர்க் கருவிகளான வாளும், வேலும் திட்டமிட்டு கொலைக்கருவிகள் என்றும் தடைசெய்யப்பட்டு விட்டது. ,  இன்று பூசை அறையிலும், பொருட்காட்சியிலும், அருங்காட்சியத்திலும் இருக்கிறது.

நடந்த தேர்தலில் 110 ஆண்டுகளாக ,இந்தியாவை ஆட்டிப்படைத்த காங்கிரசு கட்சியினை துவங்கி ஓராண்டு நிறைவடையாத நாம்தமிழர் கட்சி வீழத்தி காட்டியது. 554 தமிழக மீனவர்களும் 175000 அப்பாவி தமிழர்களின் படுகொலையே காங்கிரசு தோல்விக்கு காரணம். சாதிக்கட்சி தோற்றது,  மதக்கட்சி தோற்றது, பணம் கொடுக்கும் கட்சியும் தோற்றது. தமிழ் தேசியத்திற்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காங்கிரசின் தோல்வி வரலாற்று பெருமைமிக்க தீர்ப்பு.

காங்கிரசு கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் வாக்கு செலுத்தப் போவதில்லை என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர் என்று செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஆத்தூர் லெனின், பட்டாணி, இளைஞரணி வேல்ராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயசீலன் நகர பொறுப்பாளர் ,இசக்கித்துரை முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக வரவேற்கப்பட்டார். மாணவரணி பேச்சிமுத்து, ,இளைஞரணி ,இளையவன், வழக்கறிஞர்கள் தமிழடியான், பொன்ராசு, ,ரகுராமன், பூங்குமார், மற்றும் செரால்டு, பாலா, துரை, சுடலை, திருச்செந்தூர் மகாதேவன், ,ராசா, கோமதிசங்கர், மதன், மாரிமுத்து என்னும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

லெனின், பட்டாணி, சுந்தரராசு, வேல்ராசு, விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முந்தைய செய்திஈழத்தமிழர் பிரச்சனையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்.
அடுத்த செய்திதமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி