வேலூரில் நடைபெறவிருக்கும் ‘மே 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’ குறித்தான கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 8-ம்தேதி ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு மற்றும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செழியன் அவர்கள் அதுகுறித்து சுவர் விளம்பரம், சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை விளம்பரம்,உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் மற்றும் வாகனப்பரப்புரைத்திட்டம் பற்றி விளக்கினார்கள்.தோழர்கள் சுப்பு மற்றும் வின்சென்ட் ஆகியோர் தனிமனித ஒழுக்கம் மற்றும் தமிழரின் சிந்தனை,ரசணை, பண்பாடு குறித்தான தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் மே 18 பொதுகூட்டத்திற்கான திட்டம் குறித்து கருத்து தெரிவித்தனர். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டனர்.