தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனார் அவர்களுக்கு மதுரை நாம் தமிழர் வீரவணக்கம்

67

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி இன்று காலை 10.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் மதுரை நாம் தமிழர் கட்சியினர் தமது வீரவணக்கத்தை செலுத்தினர். இந் நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார்.  நகர அமைப்பாளர் சிவாநந்தன், புறநகர் மாவட்ட அமைப்பாளர் செங்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவரது தமிழினத்திற்க்கான சேவை பற்றியும் கட்சியின் கலை இலக்கிய பாசறை அமைப்பாளர் திரு. தமிழ்கூத்தன் அய்யா அவர்கள் உரை நிகழ்த்தினார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.