ஐ.நாவுக்கு நாம் வலுவான ஆதரவுகளை வழங்குவோம்: வில்லியம் ஹெக்

24

ஐ.நா அறிக்கைக்கு தமது அரசு வலுவான ஆதரவுகளை வழங்கும். நாம் அறிக்கையை தீவிரமாக படித்துவருகின்றோம். அதேசமயம், சிறீலங்கா அரசு தெளிவான பதிலை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளதை ஐ.நா அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறிலங்கா அரசு தொடர்பில் ஐ.நாவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பும் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றன என லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் ஹெக் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் அவர்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை (03)  கேள்வி எழுப்பியிருந்தார்.

இது ஒரு முக்கியமான பிரச்சனை, சிறீலங்காவின் நீண்டகால நன்மைக்கு அது முக்கியமானது. இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இது முக்கியமானது. ஐ.நா அறிக்கைக்கு எமது அரசு வலுவான ஆதரவுகளை வழங்கும். நாம் அறிக்கையை தீவிரமாக படித்துவருகின்றோம். அதேசமயம், சிறீலங்கா அரசு தெளிவான பதிலை வழங்கவேண்டும் என வில்லியம் ஹெக் பதில் அளித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக கூறியிருந்தது. நாம் அதனை எதிர்பார்க்கிறோம். ஆனால் எமது முடிவு தெளிவானது. அதாவது சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீன, காத்திரமான விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான செயலாளர் அலிஸ்ரர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நாம் கவனம் செலுத்திவருகின்றோம். ஆனால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என எம்மால் எதிர்வுகூறமுடியாது. எனவே தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறீலங்கா அரசு இனங்களுக்குஇடையிலான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஈழம் இ நியூஸ்

முந்தைய செய்திபயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்! பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு இலங்கை அழைப்பு
அடுத்த செய்திமுற்றாக கைவிடப்பட்ட நிலையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்