இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி குமாரபாளையம் நாம் தமிழர் ஆர்பாட்டம்

38

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஞயற்றுக் கிழமை 08.05.11  காலை 11.00மணியளவில் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர்  பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ராஜபக்சேவின் உருவ பொம்மை தூக்கில் இடப்பட்டது, பின் ராஜபச்சே கொடும்பாவி எரிக்கப்பது இதனை அடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை ஆகினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணப்பாளர் செந்தில் தலைமை ஏற்று நடத்தினார். குமராபளையம் ஒருங்கிணைப்பாளர் வெங்கட் துவக்க உரையாற்றினார். அழ கணேசன், சுரேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானி நகர ஒருங்கிணைப்பாளர் வேலு தம்பி நன்றி உரையாற்றினார்.

முந்தைய செய்தி[படிவம் இணைப்பு] பான்கிமூனுக்கு 2 கோடி கையெழுத்துகளை விரைந்து அனுப்பவும்: பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்
அடுத்த செய்திபோர்க் குற்றவாளி இராசபக்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்! – ரொறன்ரோ அமெரிக்க தூதுவராலயத்தின் முன் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்