ஐ.நா சபையும் இலங்கை அரசும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் – விசாரணைக்குழு பரிந்துரை.

26

இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளையும் செய்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

* இலங்கை அரசின் விசாரணைகளை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

* கண்காணிப்பு குழு இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக கண்காணித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* ஆதாரங்களை சேகரித்து, அதனை பாது காத்து வழங்க வேண்டும். * இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை ராணுவக் குழுக்களினாலும் மேற் கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் எச்சங்கள் வழங்குவதுடன் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர் கள் மற்றும் இறந்தவர் களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

* போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உள வியல் உதவிகளை வழங்க வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடிய மர்த்தப்பட வேண்டும்.

* விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

* காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத் துலக தராதரத்திற்கு மாற்ற வேண்டும்.

* தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்.

* அவர்களை பார்வை யிடுவதற்கு உறவினர் களும், வக்கீல்களும் அனுமதிக் கப்பட வேண்டும்.

* நீதிமன்றத்தின் மூலம் அவர் களுக்கு நீதி வழங்கப் பட வேண்டும். * குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படு வதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* சுதந்திரமான நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

* பொது அமைப்புக் களுடன் இணைந்து சமூகப் பிரச் சினைகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக் குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* போரின் இறுதி நாட்களில் இடம் பெற்ற பொது மக்களின் இழப்புக்களுக்கு அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

* இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

* 2009-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்த தீர்மானத்தை ஐ.நா. மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

* மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடை முறைப்படுத்துவது தொடர் பாக போரின் போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டே இனபடுகொலை செய்த இலங்கை அரசே சர்வதேச தரத்திலான போர்குற்ற விசாரணையை நடத்தவேண்டும் என்ற பரிந்துரைகள் எவ்வகையில் சரியானதாக இருக்குமென்றும் இது மேலும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ?

முந்தைய செய்திமீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்
அடுத்த செய்திமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் – அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சூசன் ரைஸ்.