[காணொளி இணைப்பு] வெள்ளகோவில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

26

வெள்ளகோவிலில்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வருகையை முன்னிட்டும், காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றும் வெள்ளகோவில் ஒன்றிய நாம் தமிழர் சார்பில் கைதட்டி, பாட்டு பாடி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

05.04.11 அன்று காங்கிரசை கருவருக்க நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெள்ளகோவிலில் மாலை 6.00 மணிக்கு எழுச்சியுரை ஆற்றவிருக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளகோவில் ஒன்றிய நாம் தமிழர் சார்பில் வெள்ளகோவில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கைதட்டி, பாட்டுப்பாடி பிரச்சாரம் 03.04 (ஞாயிறு) அன்று இந்திரா நகர், கச்சேரி வலசு, ராமலிங்கபுரம், சொரியங்கிணற்றுப்பாளையம். நாகநாய்க்கன்பட்டி, அகலரப்பாளையம் புதுார் சந்தை, பேருந்து நிலையம், முத்துார் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. என்ன செய்யலாம் இதற்காக? நுாலை பொதுமக்களிடம் காட்டி ஈழ மக்களின் கொடிய படுகொலைக்கு காரணமான காங்கிரசு கட்சியை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர் ப.கோபாலகிருட்டிணன் முன்னிலை வகித்தார்.கண்ணன், விசயகுமார், முனியப்பன், பிரேம், பார்த்தீபன், கதிர்வேல், ரமேசு, தமிழ்செல்வன், சதீசு, சங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.
அடுத்த செய்திTherthal parapurai paadal