[2ஆம் இணைப்பு] ராஜபக்சேவின் மும்பை வருகையைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டம்.

57

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை மட்டைபந்தாட்ட இறுதி போட்டியை காண, ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மும்பை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி கேப்டன் தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில், மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் அவர்கள் முன்னிலையில் இன்று மும்பை விமான நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு அனுமதி தர காவல் துறையினர் மறுத்துவிட்டனர். எனவே மும்பை சயான் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிங்கள அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் இலங்கை தேசிய கொடியையும்,ராஜபக்சேவின் உருவப்படத்தையும் தீயிட்டு கொளுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் தமிழர்நடேசன், தமிழ்செல்வன், பழனிவேல், அய்யர்பட்டு, சங்கர், வரதராஜன், திருமலை குமரன்,லோகநாதன்,மற்றும் ராமு பெரியசாமி, களஞ்சியன், ராஜா, சரவணன் உட்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஏழு பெரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில தலைவர் அர்ஜுன், கண்ணிவெடி கந்தசாமி, மலாட் கெனடி, மா.சிவன், கோ.பன்னீர் செல்வம், தானே ஆனந்த், த.பிரபாகரன், த.சத்யராஜ், காமராஜ், சு.மூர்த்தி, இ.நேரு, சங்கர், எழுமலை, ராஜேந்திரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, உலகத்தமிழர் பேரவை, பெரியார் திராவிடர் கழகம் விழித்தெழு இளைஞர் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று இரவு 20 பேர் கொண்ட காவலர் அணி விமான நிலையத்தில் மீனவர் அணி தலைவர் யுவன் ரோச் அண்ணா, நாம் தமிழர் மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தது. மேலும் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் உட்பட மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.