மும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது

39

மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?) தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மும்பை நாம் தமிழர் கட்சியினர் இன்று பெரிய அளவிளான போராட்டத்தை முன்னெடுக்க தயாராகினர். மும்பை தாராவி பகுதியில் ராஜபக்சேவின் உருவ படம் எரிக்கப்பட்டது.

இதையொட்டி இன்று அதிகாலை 2.00 மணியளவில் மும்பை நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராசேந்திரன்,  சேலம் செல்ல துரை மற்றும் விழித்தெழு இயக்கத்தை சேர்ந்த சிரிதர் ஆகியோர் கைது செயப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போர்குற்றவாளி ராஜபக்சேவை அணைத்து வழிகளிலும் தொடர்ந்து காப்பாற்றிவரும் இந்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கையே இக்கைது என  கருதப்படுகிறது. மராட்டிய மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திபட்டுகோட்டை தேர்தல் பரப்புரை 1-4-2011
அடுத்த செய்தி[புகைப்பட தொகுப்பு இணைப்பு] திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.