[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.

37

இன்று மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் நாளை இந்திய இலங்கை துடுப்பாட்டத்தை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போற்குற்றவாளி ராஜபக்சே மும்பை வருதை கண்டித்து நாளை ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் பரப்புரையில் இன்று மாநில செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் கணேசன், மலாட் கெனடி உட்பட பலர் ஈடுபட்டனர். மும்பை தாராவி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த போது ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த தமிழர்கள் ராஜபக்சேவின் படத்தை எரித்தனர்.