தமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் அதிவிரைவு கடற்படை கப்பலால் மோதி 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.

22

கடந்த ஏப்ரல் 2  ஆம் தேதி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மீனவர்கள் விக்டஸ் (41 ) த/ பெ.சேவியர், அந்தோணி(32 ) த/ பெ.பிரான்சிஸ் ஜான்பால்(35  ) த/ பெ. நம்பிக்கை , ஒட்டன்குளம் மாரி( 35 ) ஆகியோர் ஒரு மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றனர். உலக கிரிகெட் ( மட்டைபந்து) போட்டியில் இலங்கை தோல்வி அடைந்த வெறியில், அன்று இரவு  அதிவிரைவு கடற்படை கப்பலால் மீன்பிடி படகில் மோதி 4  மீனவர்களை படுகொலை செய்துள்ளனர். 4 நாட்கள் கழித்து மீனவர்கள் சடலம் ஒன்றன்பின் ஒன்றாக இலங்கையின் நெடுந்தீவு, யாழ்ப்பாணம் கரையோரங்களில் கரை சேர்ந்துள்ளது.

தமிழக தேர்தல் நேரம் என்பதால், இந்த மனிதநேயமற்ற படுகொலையை இலங்கை, இந்திய அரசுகள் மறைத்து கால தாமதப்படுத்தியுள்ளார்கள். காணாமல் போனால் மீனவர்களை தேடுவதற்கு வழக்கமாக வழங்கும் அனுமதியையும் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்கள்.பிறகு அனுமதியளித்தும் கடலுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டவர்களை சிங்கள இனவெறி கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

ராமநாதபுரம் காங்கிரசு வேட்பாளர் ஹசன்அலி, மீனவர்களை சமாதனபடுத்த, திசை திருப்ப முயற்சி செய்கிறார்.

படுகொலையை கண்டித்து சுமார் 2 ஆயிரம் மீனவர்கள்  ராமேஸ்வரம், தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று( 8 – 4 – 2011 ) காலை 10 மணி அளவில் சாலை மறியல் நடத்தினார்கள். நேற்று ( 7 – 4 – 2011 ) மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தை சூறையாடினார்கள். அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி கலெக்டர் அவர்கள் மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணாமல் போன மீனவர்களை மீது தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. தமிழக மீனவர்களின் படுகொலை அதிகரித்துகொண்டே செல்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள்  இலங்கை கடற்படையின் தாக்குதலில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. மூன்றாம் தேதி காலை 633 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது விசைப்படகில் சென்ற மீனவர்கள் விக்டஸ், ஜான் பால், அந்தோணி, சின்னத்தம்பி ஆகியோர் கரை திரும்பவில்லை. மீனவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளவிளைஎன்றால் மீண்டும் தொடர்வண்டி மறியல் நடைபெறும் என மீனவ மக்கள் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து திட்டமிட்டு இச்செய்தியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள் மீனவர்கள் படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.