ஈழ தமிழர்களுக்காக இன்னுயிர் துறந்த ஈகி கிருட்டினமூர்த்தியின் தியாகத்தை திசை திருப்ப காவல்துறையினர் முயற்சி

47

ஈழத் தமிழர் பிரச்னைக்காக தற்கொலை செய்ததை தமிழக காவல்துறையினர் திசை திருப்ப முயற்சிப்பதாக, சங்கரன்கோவில் அருகே பலியான இன்ஜினியர் கிருட்டினமூர்த்தியின் தந்தை ராமசுப்பு, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கிருட்டினமூர்த்தியின்  தந்தை ராமசுப்பு, வழக்ரைஞர் சுப்புராஜ் மூலம் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

கிருட்டினமூர்த்தி, ராஜஸ்தானில் பணிபுரிந்து வந்தார். 30 நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்த அவர் ஈழத் தமிழர்களின் நிலையை எண்ணி அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று ஏப்ரல் 18ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற என் மனைவியும் படுகாயமுற்று, சிகிச்சை பெற்று வருகிறார்.

மகன் இறந்த போது, வீட்டில் கடிதம் கிடந்தது. அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள், ராஜபக்சே அரசால் கொல்லப்படுகின்றனர். அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உதவ முடியாத நிலையில் இருக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தது.

இச்சம்பவங்களை காவல்துறையினர் மறைத்து , தங்கள் மனதில் தோன்றியவாறு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விஷயங்களை சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலமாக அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தும், அதைப் பெற,காவல்துறையினர் மறுக்கின்றனர். விசாரணையை திசை திருப்ப காவல்த்துறையினர் சட்ட விரோதமாக முயற்சிக்கின்றனர். நடந்த சம்பவம் குறித்து எங்களிடம் வாக்குமூலம் பெற மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட வேண்டும்.என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஒரு புனைகதை – இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
அடுத்த செய்திநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.