இன்று கோவையில் தமிழர் கூட்டமைப்பு இயக்கம் ஏற்பாட்டில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை நாசப்படுத்தி அவமதித்ததை கண்டித்து கண்டன பொதுகூட்டத்தில் சீமான் கலந்துகொள்ளகிறார். முன் னதாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பெண்கள் விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதது குறித்தும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசுவதோடு இந்துத்வா உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பதிமூன்றாவது நாளாகத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.