சீறும் சீமான் – கவிஞர் காப்பிராயன்

20

சூறாவளி சுற்றுப்பயணம்
சீமான் வர்றாரு…
தமிழனுங்கள கொன்னவங்கள
தூக்கப் போறாரு!

‘முள்ளிவாய்க்கால் படுகொலைதான்
மறந்து போகுமா…
சூடு சொரணை தமிழனுக்குத்
தொலைஞ்சு போகுமா?

கேடுகெட்ட படுபாவிங்க
போட்டுத் தள்னாங்க…
தமிழங்களைக் குழிதோண்டி
தள்ளி மூடுனாங்க!

கதருக்காரன் நம்ம இனத்த
கழுத்தறுத்தானே…
பதவிக்காக இங்குள்ளவனும்
பாத்து நின்னானே!

மீனவன நடுக்கடல்ல
சுட்டுத் தள்னாங்க…
ஏன்னு எவனும் கேட்டானா
எப்படி ஜெயிப்பாங்க?’

ராக்கெட் போல சீமானோட
கோவம் சீறுது…
கதருக்காரன் வயித்துலதான்
பீதி புடுங்குது!

நன்றி – விகடன்