[காணொளி இணைப்பு] 22-1-2011 அன்று நடைபெற்ற “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்

46

கடந்த 22.01.11 சனிக்கிழமை சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக அவதியுறும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம் பேரறிவாளன் அவர்களின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மனித உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஜான் பிரிட்டோ, பெண்கள் முன்னணி இயக்கத்தின் தலைவர் சரஸ்வதி,மற்றும் சவுரிராசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் செய்யாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் அவர்களை உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பேரறிவாளன் அவர்களுடைய விடுதலையை எதிர்நோக்கியுள்ள ஜோலார்பேட்டை மக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு பேரறிவாளன் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] கரூரில் நடைபெற்ற விலைவாசி உயர்வை கண்டித்து கரூர் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன பொதுக்கூட்டம்.