நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 அன்று நடைபெற்றது.

34

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 ஞாயிறு அன்று நடைபெற்றது.  தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  அலைமகன் (எ) பிரபு ஆலோசனையின்படி கோவில்பட்டி நகர பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் கோவில்பட்டியில் நகரசெயலாளர் புங்கன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர செயலாளர் இசக்கித்துரை, செயசீலன் நகர துணை செயலாளர்.மகேசு வழக்கறிஞர் சீறிரமணன் முன்னிலை வகித்தனர். நியமனம் செய்த பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பார்வைக்கு அனுப்பப்பட்டு பின்வரும் நாள்களில் அறிவிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதுடன் கட்சி வளர்ச்சி நிதி வசூலித்தல், கட்சிக்கான பேச்சாளர்களை பயிற்சி கொடுத்து உருவாக்குதல், கட்சிக்கான நகர அலுவலர் அமைத்தல், ஒன்றிய பகுதிகளில் கட்சி வளர்ச்சிக்கான 5 பேர் கொண்ட குழு அமைத்து செயல்படுதல் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி வழக்குரைஞர் அணி பாதுகாப்பு அளிக்க முன்வருதல் மற்றும் தேர்தல் களத்தில் கட்சியின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தியதோடு கூட்டம் நிறைவுபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அலைமகன் (எ) பிரபு ஆலோசனையின்படி தூத்துக்குடியில் இருந்த நாம் தமிழர் கட்சி இளைஞரணியின் ப.ம.இளையவன், வேல்ராசு, லெனின், இரவிசங்கர் பட்டாணி, மாரிமுத்து மற்றும் கோவில்பட்டி வழக்குரைஞர் மகேந்திரகுமார், மு.விசயகுமார், இ. லட்சுமணபாண்டியன், இராசேசுகண்ணா, முத்து, கருப்பசாமி, விசயராசன், வீரபாண்டி, சுந்தரராசு, மாரிமுத்து, தெய்வேந்திரன், கரும்புலிவர்க்கீசுராசா, மாடசாமி, செந்தில்முருகன், செயபாசு, இராசு, தானி (ஆட்டோ) செல்வம், தானி (ஆட்டோ) மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் தோழர் இராமமூர்த்தி நன்றி கூறினார்.

முந்தைய செய்திவிடுதலை புலிகளின் தடை விதிப்பிற்கு எதிரான வைகோவின் மனு! சென்னை உயர்நீதிமன்றம் ஏற்பு.
அடுத்த செய்திதமிழினத்தின் முதல் எதிரி காங்கிரஸ் – புதுவையில் செந்தமிழன் சீமான் பேட்டி.