நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாலர்களில் ஒருவரான சுப.முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிகொல்லப்பட்டார். இதனையடுத்து மகாராஷ்டிர மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக அவர்களின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கண்டன கூட்டம் மற்றும் இரங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சேலம் செல்லத்துரை,கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி,உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முத்துகுமார் அவர்களின் படுகொலைக்கு காரனாமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மும்பையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெறும் என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.