பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்

23
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு தொப்புள் கொடி உறவுகளின் உதவி நாடி வந்தவர்கள். அப்படி வந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கவைப்பதாக கோரி உண்மையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை பிணையில் விடுவிக்க கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அதன் பின் 9 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டனர், மீதம் உள்ள நால்வர் கங்காதரன், சந்திர குமார், ஜெயா மோகன், அமலன் இதில் அமலன் என்பவர் இன்று காலை தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார், அவரை காப்பாற்றி இப்போழுது சென்னை உள்ள மருத்துவ மனையில் கீழ்பக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போது பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவர் நிலைமை பற்றி அறிய நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தியை தொடர்பு கொள்ளவும் : கைபேசி எண் : 098425 21338. மேலதிக செய்திகள் விரைவில்.