[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.

399

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் கட்டளையின்படி சென்னை ஆழ்வார் திருநகரிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் அனைவரும் அம்மா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்பு கோடி ஏந்தி வந்தனர். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தின் முதல் பகுதியாக தாயாருக்கு ஒரு நிமிடம் மவுனஞ்சலி செலுத்தப்பட்டது. ஊர்வலத்தின் இறுதியாக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பார்வதி அம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செல்லுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் கட்சியின் நிர்வாகிகளான அன்புதென்னரசன், தங்கராசு, அமுதாநம்பி, ஆவல்கனேசன், ஐ.கோ,   பாலமுரளிவர்மன், மகேந்திர வர்மா, செல்வராசு, வழக்கறிஞர் பரசுராமன், சுந்தரமூர்த்தி, மற்றும் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் அம்மா, புலவர் ரத்தினவேலு,கோட்டை குமார்,இயக்குனர் செல்வபாரதி,பெரியார் தி.க டேவிட் பெரியார் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.