[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.

30

திருப்பூர் நாம் தமிழர் சார்பாக வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. மாநகரம் முழுவதும் இருபது இடங்களில் மாவீரன் முத்துகுமாரின் நினைவுப் பதாகை வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அணைப்புதூர், அவினாசி ,எஸ்.எ.பி. திரையரங்கு, புதிய பேருந்து நிலையம் , வலயங்காடு, அனுப்பர்பாளையம், பழைய  பேருந்து நிலையம்,கருவம்பாளையம், கே.வீ,ஆர் நகர்,  செல்லம் நகர், பல்லடம் சாலை மகாலட்சுமி நகர், அருள்புரம் , வீரபாண்டி பிரிவு , வெள்ளியங்காடு, கல்லாங்காடு,மண்ணரை, கொங்கு நகர் முக்கிய சாலை , முதலிபாளையம் சிட்கோ மற்றும் பாரப்பளையம் ஆகிய இருபது இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வை செல்வம் , சமரன் பாலா , மோகன் , பரமசிவம், கௌரிசங்கர், வான்மதி வேலுசாமி, சண்முகசுந்தரம்மற்றும் சு. பா. சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.

முந்தைய செய்திதமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]நாகையில் நாம் தமிழர் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க பொதுகூட்ட நிகழ்வு.