[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.

29

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி  அம்மாள்  நினைவேந்தல்  நிகழ்வு.                                      கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் நகர தலைமை  அலுவலகத்தில் 20-02-2011 அன்று மாலை 6 மணி அளவில் தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது . இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நகர அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தலைமையேற்றார். மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன், நாம் தமிழர் சான்றோர் பேரவை உறுப்பினர் பேரா.முனைவர்.ச.மணி, பெருந்தமிழர் வீரனார், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில்  ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள்.

இந்த இரங்கல் கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் நகர அவைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அமைப்பாளர் பிரதீப் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் இரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தார். அண்மையில் புதுக்கோட்டையில் கொலைக்கார படையினரால் கொலை செய்யப்பட்ட கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி .மாவீரன் முத்துக்குமார் அவர்களின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், கொலை செய்த கொலைக்கார கும்பலை காவல்துறையினர் உடனே கைது செய்ய கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.
அடுத்த செய்தி22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்கம்.