நாம் தமிழர் கட்சியின் நிர்வாக வசதிக்கு மைய அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

50


அன்பார்ந்த தமிழினச் சொந்தங்களுக்கு வணக்கம்,

ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தில் எண்ணிக்கை வலிமைகூடி   வாழும் இம்மண்ணின் மைந்தர்களான நம் தமிழினத்தையும் நம்மோடு ஒத்து வாழும் சாமான்ய மக்களையும் நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து பாராளுமன்ற, சட்ட மன்ற வாக்கு முறை ஆயுதத்தைக் களத்தில் ஏந்தி நம்மினத்துரோகிகளையும் தமிழன்னல்லாமல் இம்மண்ணை ஆள நினைக்கும் விரோதிகளையும், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய மாவட்ட, ஒன்றிய, நகர, கிராமக்குழுவென  நம் கட்சியை வலிமைப்படுத்தி சாதி,மதம்,கட்சி என சிதறிப்போன தமிழனையும் மற்ற வெகு மக்களையும் வென்றெடுத்துத்  தமிழகத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்றி தமிழனே இம்மண்ணை ஆள வேண்டும் தமிழன் மானத்தோடு வாழ வேண்டும் என்ற இலட்சியத்தை முன்னெடுத்து அரசியலாக்கிச்  செயல்பட, அந்த வெற்றி இலக்கை நாம் தமிழர் கட்சி அடைய கட்சித் தலைமை இடும் பணியையும், உங்கள் பகுதி மக்களையும் தெளிவான அணுகுமுறையில் நீங்கள் நடைமுறைப் படுத்த உங்களோடு தொடர்பு கொண்டு வழிகாட்ட ஒரு மைய அமைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் தம்பி அன்புத்தென்னரசன் அவர்களை  முதன்மை உறுப்பினராகவும்,சகோதரிஅமுதாநம்பி, பாப்பாத்திராமமூர்த்தி, ஆவல்கணேசன், தனித்தமிழ்வேங்கை, தங்கராசு, கருந்தமிழன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் நல்கி  நம் இயக்கத்தின் வளர்ச்சி, நாளைய அரசியல் புரட்சி என வரலாற்றை மாற்றும் சக்தியாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு:

தலைமை அலுவலகம் — 044-24769070, 24769080
அன்புத்தென்னரசன் – 9841654209
அமுதா நம்பி — 8825655442
கருந்தமிழன் — 9600444635

தமிழன்புடன்,

செந்தமிழன்  சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்