தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார்.

874

எமது தமிழீழத் தேசியத் தலைவரின் அன்னை பார்வதி அம்மா அவர்கள் தமிழீழ நேரப்படி 20.02.2011 அன்று அதிகாலை 6.30 மணியலவில் இயற்கை எய்தினார். தமிழீழத்தின் விடியலுக்காக தேசப் புதல்வனைப் தமிழர்க்கு தந்த அன்னை அவர்கள் இறுதிவரை சாதாரண பெண்மணியாகவே வாழ்ந்து மடிந்தவர். அன்னை அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். …

வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்  மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.


இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார்.    அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார்.   இந்நிலையில்   வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.


முந்தைய செய்திமாதவரம் பொதுகூட்டம் 19-2-2011
அடுத்த செய்திதமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை