சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

1155

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா. முத்துகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(25.02.11) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.

மற்றும் பெ.மணியரசன், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.
ஐயா அறிவரசன், நாம் தமிழர் கட்சி.
அணைக்கரை மாறன், நாம் தமிழர் கட்சி.
சிவசாமி தமிழர், தமிழர் தேசிய வழக்கறிஞர் நடுவம்.
அரிமாவளவன், தமிழர் களம்.

பாவேந்தர், தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை

ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் தேசிய உணர்வாளரான முத்துகுமாரின் படுகொலையில் காவல் துறையின் மெத்தனபோக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.