பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு தொப்புள் கொடி உறவுகளின் உதவி நாடி வந்தவர்கள். அப்படி வந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கவைப்பதாக கோரி உண்மையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிணையில் விடுவிக்க கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை இவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். தங்களை விடுவிக்க கோரியும் திறந்தவெளி முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் தங்க வைக்க வேண்டியும் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.